பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை - விநோத சம்பவம்!

By Swetha Subash May 26, 2022 08:43 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.

ஆப்பிரிக்காவின் தெற்கு சூடானில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை செம்மறி ஆடு ஒன்று மோசமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை - விநோத சம்பவம்! | Sudan Sheep Gets 3 Years Jail For Killing Woman

அதியு சாப்பிங் என்ற பெண்ணை ரம்பெக் கிழக்கு பகுதியில் அக்யுயேல் என்ற இடத்தில் அந்த செம்மறி ஆடு பலமுறை தாக்கியுள்ளது.

இதனால் அந்த பெண்மணிக்கு பலத்த காயம் ஏற்படவே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த செம்மறி ஆட்டை பிடித்து மாலேங் அகோக் பாயத்தில் உள்ள காவல் நிலையத்தில் கட்டிவைத்தனர்.

பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை - விநோத சம்பவம்! | Sudan Sheep Gets 3 Years Jail For Killing Woman

மேலும் இது குறித்து பேசிய மேஜர் எலைஜா மாபோர், “இந்த விவகாரத்தில் செம்மறி ஆட்டின் உரிமையாளர் நிரபராதி, செம்மறியாடுதான் இந்தக் குற்றத்தைச் செய்தது, எனவே அந்த ஆட்டை கைது செய்துள்ளோம்" என தெரிவித்தார்.

பெண்னை தாக்கி கொன்ற ஆட்டை ராணுவ சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.