த்ரிஷா விஜய்க்காக உயிரையே கொடுப்பாங்க - போட்டுடைத்த சுசித்ரா!
விஜய்-த்ரிஷா குறித்து பரவி வரும் வதந்திக்கு சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்-த்ரிஷா
கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் பெரிதாக மக்கள் மனம் கவர்ந்தவர்கள் விஜய்யும், த்ரிஷாவும் தான். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
தற்போது இருவரும் ரகசிய உறவில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர், அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார்.
சுசித்ரா தகவல்
இதற்கிடையில் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யவுள்ளதாகவும், அதற்கு காரணம் த்ரிஷாவுடனான் உறவு எனவும் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாடகி சுசித்ரா, “விஜய்க்கு இப்போது இருக்கும் ஆணிகள் யார் என்றால் திரிஷா, சங்கீதா, வெங்கட் பிரபுவுடைய கேங்.
இந்த ஆணிகள் எல்லாம் விஜய்க்கு குத்தாமல் இருப்பார்கள். அவருக்காக உயிரைக்கூட கொடுப்பார்கள். விஜய்க்கு கடவுள் அனுப்பி வைத்த தங்கச்சி ராஷ்மிகா மந்தனா, தம்பி லோகேஷ் கனகராஜ். இவர்களை எல்லாம் விஜய் ஒதுக்க மாட்டார். ஆனால் ஒன்று விஜய்க்கு புத்தியே சரியில்லை. ராஷ்மிகாவுக்கு விஜய் ராக்கி கட்ட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.