முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: பல்டியடித்த இம்ரான் கான்

imrankhan raperemark stupidthing
By Irumporai Jul 28, 2021 01:34 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இம்ரான் கானின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் இம்ரான் கான்.

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களே அந்த குற்றத்திற்கு முற்றிலும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நான் கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.

 எந்தளவுக்கு உணர்வுகளை தூண்டினாலும் அல்லது உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணிந்தாலும் குற்றத்தில் ஈடுபடுபவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

பாதிக்கப்ப்படவர் பொறுப்பு அல்ல.எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தை நான் சொல்லியதே இல்லை என இம்ரான்கான் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உணர்வுகள் தூண்டப்படுவதை தவிர்த்தாலே பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கலாம் என பிரதமர் இம்ரான் கான் பெண்களை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது