திமுகவில் மீண்டும் வாரிசு அரசியலா: புலம்பும் உறுப்பினர்கள்

dmk member stalin Udhayanidhi
By Jon Mar 13, 2021 10:43 AM GMT
Report

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் , தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. அத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் பிடிவாதம் பிடிக்கக்கூடாது என்றும், இன்னும் பல களங்கள் இருப்பதால் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் , தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக.

அத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலில், வாரிசுகளுக்கு மட்டுமே அதிக இடங்கள் ஒதுகப்பட்டுள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புது முகங்களுக்கு வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது என்றும், 3 தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.

இதற்கு முதல் சான்று உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்கிற ஒரே காரணத்தால் சுலபமாக 3வது வாரிசுக்கு,அதுவும் தலைநகரில் உள்ள சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட சுலபமாக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும். பல தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.வேறு வழியில்லாமல் பல்லை கடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் உறுப்பினர்கள் புலம்புவதாக செய்திகள் வெளி வருகின்றன. இது தவிர ஐ பேக் ஆதிக்கமும் இருப்பதாக புலம்புகின்றனர் கட்சி தொண்டர்கள் சிலர்.