சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் - அரசு அதிரடி அறிவிப்பு எங்கு தெரியுமா?
சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
புதுவை பட்ஜெட்டில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி 6 ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அனைத்தும் சிபிஎஸ்சி பாடத்திட்டமாக மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை பிறந்தவுடன் அந்த பெண் குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனவும் 18 ஆண்டுகள் கழித்து அந்த பெண் குழந்தையின் மேல்கல்வி அல்லது திருமணத்திற்கு அந்த நிரம்பர வாய்ப்புத் தொகை பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேருந்தில் இலவச பயணம்
மேலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதரருக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என்று அதிரடியாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதனால் புதுவை அரசுக்கு ரூ.126 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டு வரும் உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.