அடுத்தடுத்து அதிர்ச்சி - பால் விலை உயர்கிறது!
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறியுள்ள நிலையில் அடுத்ததாக மிக முக்கிய உணவு பொருளான பால் விலை உயர இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து பால் விலை உயர இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது இதற்கு அடிப்படை என்னவென்றால் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குறிப்பிட்ட ஒரு அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை தான் இது. ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள காப் பஞ்சாயத்து வேளான் சட்டங்களுக்கு எதிராகவும், அதிகரிக்கும் எண்ணெய் விலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பால் விலையை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது.
மார்ச் 1 முதல் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்கப்படும் என்று காப் பஞ்சாயத்து முடிவு செய்திருக்கிறது. இருப்பினும், இந்த முடிவு வெளியில் அல்லது டெய்ரியில் விற்கப்படும் பாலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கிராமவாசிகளுக்கு பழைய விலையிலேயே பால் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், யுனைடெட் கிசான் மோர்ச்சா இப்போது பால் விலையை 50 ரூபாய் அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. மூன்று வேளான் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், வரும் நாட்களில், போராட்டத்தை அமைதியாக தொடர்ந்து காய்கறிகளின் விலையையும் அதிகரிப்போம் என்று விவசாய சங்கங்கள் கூறியிருக்கின்றன.