PF கணக்கில் இருக்கும் பணத்தை நொடியில் எடுக்கும் புதிய UPI வசதி! எப்போது அறிமுகம்?
பிஎஃப் பணம் தொடர்பாக அதன் சந்தாதாரா்களுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி இபிஎஃப்ஓவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், அவசர தேவைக்கு பிஎஃப் பணத்தை எடுப்பது மிகவும் எளிதானதாக மாற்றப்படப்போகின்றது.

அவர்களுக்காகவே, யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் நேரடியாகத் தங்களின் வங்கி கணக்குகளுக்கே பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய செயலி அறிமுகமாகவுள்ளது.இதற்காக மத்திய தொழிலாளா் நல அமைச்சகம் பிரத்யேகமாக ஒரு புதிய செயலியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பிஎஃப் சந்தாதாரா்கள் பணம் எடுக்க வேண்டுமானால்,‘யுஏஎன்’ வலைதளம் அல்லது ‘உமாங்’ செயலி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த முறையில் பணம் கையில் வருவதற்கு கால தாமதம் ஆவதால், தற்போது தானியங்கி முறையில் 3 நாள்களில் பணம் வழங்கப்படுகிறது. இதற்கான வரம்பு அண்மையில்தான் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டது.
ஆயினும், சுமாா் 8 கோடி உறுப்பினா்களைக் கொண்ட இபிஎஃப்ஓ அமைப்புக்கு, ஆண்டுக்கு 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் வருவதால் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், வங்கிகள் வழங்கும் அதிவேக சேவைக்கு இணையாக பிஎஃப் சேவையை மாற்றும் வகையில், இந்த யுபிஐ வசதி அறிமுகமாகிறது.அதனால் பணிச்சுமை வெகுவாக குறையும் எனவும் எதிர்வுக்குகூறப்பட்டுள்ளது.
இந்த சேவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சந்தாதாரா்களின் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே நீண்ட கால சேமிப்புக்காக முடக்கப்படும். மீதி பணத்தை வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மூலம் எப்போது வேண்டுமானாலும் மீள பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது எப்படி நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரீதியிலாக நம் செல்போனில் ஒரு செயலி வாயிலாகவே மேலாண்மை செய்கிறோமோ அதேபோன்ற ஒரு சேவையை கொண்டு வர ஈபிஎஃப்ஓ அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தவுடன் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நேரடியாக தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் அல்லது தங்களுடைய ஏடிஎம் கார்டுகள் மூலமும் பணமாக எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.