ஸ்டாலின் உறுமினால் பூனையாக பதுங்குகின்றது தமிழக பாஜக : சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்
தமிழக பாஜக நிலைகுறித்து சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது , அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக
சட்டமன்ற தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வென்றதற்குப் பின் தமிழகத்தின் பா.ஜ.க. பரபரப்பாக இயங்கி வருகிறது. தினம் ஒரு விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆளும் கட்சியை விமர்சிப்பது, போராட்டம் நடத்துவது என கிட்டதட்ட ஒரு எதிர்கட்சிக்கு நிகராக நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது.

ஆடியோ விவகாரம்
அதே சமயம் தமிழக பஜகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி சூர்யா சிவா ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக -பாஜக மோதல் போக்கை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பூனையாக தமிழக பாஜக
அவர் பதிவிட்ட ட்வீட்டில், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு தாங்கள் தான் எதிர்கட்சி என்று சொல்லும் பாஜக, ஸ்டாலின் உறுமும்போது மட்டும் பயந்து பதுங்கும் பூனைகளால் நிறைந்திருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
It seems in Tamil Nadu I am the only Opposition to DMK. TN BJP is full of pussy cats who only meow when Stalin growls. Cinema culture has ruined TN BJP
— Subramanian Swamy (@Swamy39) December 4, 2022
சமீபகாலமாக தமிழக பா.ஜ.க.வில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருவதும், அண்ணாமலை அதிரடி நடவடிக்கையை கட்சியில் எடுத்து வரும் நிலையிலும் சுப்பிரமணிய சுவாமி தமிழக பா.ஜ.க.வை விமர்சித்து பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது