முட்டாள் - CAA தமிழ்நாட்டிற்கு இல்லை - கடுமையாக விமர்சித்த சுப்பிரமணிய சுவாமி
தமிழ்நாட்டில் CAA சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
CAA சட்டம்
குடியுரிமை திருத்த சட்டம் (2019) -ஐ மத்திய பாஜக அரசு, அரசாணையில் வெளியிட்டு அமல்ப்படுத்தியது. பல எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமானது, தற்போது நாட்டில் அமலுக்கு வந்துள்ளது.
இந்த பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என கூறி, பல எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதே போல, ஈழ தமிழர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் ஏன் குடியுரிமை வழங்க வழிவகை செய்யவில்லை என தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.
முட்டாள்
மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதற்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதவில், முட்டாள். இது காஷ்மீர் மற்றும் வடகிழக்குக்கானது, தமிழகத்திற்கு அல்ல என சுருக்கமாக மிகவும் கட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
Stupid. It is for Kashmir and North east and not for TN https://t.co/7YvdmqlaWu
— Subramanian Swamy (@Swamy39) March 14, 2024