‘பேசாம ஏன் பேச்சை மோடி கேட்டிருக்கலாம்’ - சுப்பிரமணிய சுவாமி அறிக்கையால் பரபரப்பு

pmmodi farmersprotest subramaninanswamy farmbills2020
By Petchi Avudaiappan Nov 20, 2021 04:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

விவசாய சட்டங்கள் மீதான மோடியின் பின்வாங்கல் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த வரலாற்றின் பின்னடைவு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் ஓராண்டுகால விவசாயிகள் போராட்டத்தால் திரும்ப பெறப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி குளிர்காலக் கூட்டத்தொடரில் அதனை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்தார். 

இதனை எதிர்க்கட்சிகள், விவசாயிகள் என பலரும் வரவேற்றுள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆங்கிலத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் இந்தியாவின் விவசாய சீர்திருத்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பின்வாங்கியதால் ஐந்து தாக்கங்கள் ஏற்படலாம். இது இந்தியா இதுவரை கண்டிராதது ஆகும்.  கடந்த வருடம் நவம்பரில் கொண்டு வரப்பட்ட விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் விலை உறுதி மற்றும் விவசாயிகள் சேவைகள் சட்டம் 2020க்கான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஆகியவற்றை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மோடியின் அனைத்து அறிவிப்புகளையும் போலவே, யு-டர்ன்னும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வந்துள்ளது. குருநானக் ஜெயந்தி, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச தேர்தல்கள் போன்றவை இதையொட்டி வருகின்றன. இந்தியாவின் விவசாயம் பணக்கார விவசாயிகள், வணிகர்கள் மற்றும் இடைத்தரகர்களின் காலடியில் நசுக்கப்படப்போகிறது. இனி, அடுத்து வரும், கால் நூற்றாண்டுக்கு எந்த அரசியல் கட்சியும் இந்த சீர்திருத்தங்களைத் தொடத் துணியாது. இது இந்தியாவுக்கு பெரிய இழப்பு.

மேலும் மூன்று விவசாய சட்டங்களை ஆதரித்தவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். அமைச்சரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, பாஜகவின் அடிப்படை தொண்டனும் இப்போது கை விடப்பட்டுள்ளார். பிரதமர் மோடி அறிவிக்கும் விஷயங்களில் உறுதியாக இல்லை என்ற மெசேஜ் போயிருக்கும். தொண்டர்கள் சொல்வதை பாஜக தலைமை கேட்க வேண்டும். பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் இந்த பின்வாங்குதல் பாஜகவுக்கு உதவுமா என்றால் உதவாது. போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் இது தங்கள் வெற்றி என்று வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவார்கள்.

உயிரிழந்த விவசாயிகளை தியாகிகளாக மாற்றுவார்கள், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் மரணங்களை இவர்கள் தங்கள் அரசியல் நலனுக்காக திருப்புவார்கள். பாஜக உத்தரபிரதேசத்தில் வெற்றிபெறக்கூடும், ஆனால் மோடியின் பின்வாங்குதல் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வலிமையை கொடுத்துள்ளன.  விவசாய சட்டங்களை ரத்து செய்தாலும் இல்லாவிட்டாலும், பஞ்சாப் ஒருபோதும் பிஜேபிக்கு கிடைக்கப்போவது இல்லை.இனி மோடி மேற்கொள்ளும் ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் எதிர்ப்பதற்கு ஒரு கும்பல் துணியும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் வைத்து, தருமரிடம் பீஷ்மர் தன்னை எப்படி தோற்கடிக்க முடியும் என்ற ரகசியத்தை சொல்லிக் கொடுத்ததை போல, மோடி எதிர்கட்சிகளுக்கு, தன்னை வீழ்த்தும் திறவுகோலைக் கொடுத்திருக்கிறார்.

அதேசமயம் விவசாயச் சட்டங்களை விரும்பும் விவசாயிகள் ஏற்கலாம் என்று ஆப்ஷன் கொடுத்திருக்கலாம் என்று நான் கூறியிருந்தேன், எனது பரிந்துரையின்படி மோடி செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.