பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - சுப்ரமணிய சுவாமி அதிரடி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட பாஜக சம்மதித்துள்ளது. கடந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை, அதன் வாக்கு வங்கியும் மூன்று சதிவிகிதத்திற்கு கீழ் தான் உள்ளது தேசிய கட்சியான பாஜக வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிருக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்ரமணிய சுவாமி திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெல்லும் இல்லாவிடில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தேசிய கட்சியான பாஜக வெற்றியோ தோல்வியோ அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் தமிழக தேர்தல் களத்தில் 3 ஆம் அணியாக உருவாகியுள்ள கமல் குறித்த கேள்விக்கு, கமல் யார்? அவரும் அரசியலுக்கு வந்துள்ளாரா? என்று கிண்டலாக கூறினார்.