இபிஎஸ் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது ஏன்?அமைச்சர் விளக்கம்

Tamil nadu DMK Ma. Subramanian Edappadi K. Palaniswami
By Sumathi Aug 20, 2025 05:39 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் விவகாரம்

வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடந்த அதிமுக பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

edappadi palanisamy - subramanian

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 1,330. இந்த வாகனங்கள் உயிர் காக்கும் சேவையை செய்துக் கொண்டிருக்கிறன.

எங்கு விபத்து ஏற்பட்டாலும் எங்கு விபத்து நடக்கிறதோ, அது மாநகராட்சி இருந்தாலும் சரி ,நகராட்சியாக இருந்தாலும் சரி, கிராமப்புறங்களில் இருந்தாலும் சரி 8-10 நிமிடங்களுக்குள் சென்று மக்கள் உயிரை காப்பாற்றும் சேவையில் க்கள் உயிரை காப்பாற்ற ஈடுபடுகின்றன.

ஸ்டாலினுக்கு மோனிகா பாட்டுக்கு வைப் செய்யதான் நேரம் - ஜெயக்குமார்

ஸ்டாலினுக்கு மோனிகா பாட்டுக்கு வைப் செய்யதான் நேரம் - ஜெயக்குமார்

அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவைபோல, உலகத்திலேயே வேறெங்கும் இதுபோன்று கிடையாது. தமிழ்நாட்டின் 108 ஆம்புலன்ஸ் சேவையை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாராட்டுகின்றன. ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை நடத்திவிட்டு,

இபிஎஸ் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது ஏன்?அமைச்சர் விளக்கம் | Subramanian About Ambulance Issue Eps

தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள் “அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்’ என்பதுபோல, அவருக்கு ஆம்புலன்ஸை பார்த்தால் வேறு ஏதோ நினைவு வருகிறதுபோல.

ஒரு முன்னாள் முதல்-அமைச்சர் இப்படி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல். இப்படி பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதுதான் நல்லது.

இப்படி பேசுவதால் அவருக்குதான் எதிர்ப்பு அதிகமாகும். ஆம்புலன்சை வேண்டுமென்றே அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனத் தெரிவித்துள்ளார்.