சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்திய அணி : இங்கிலாந்து தொடரில் இன்று வீரர் விளையாடுவது சந்தேகம் தான்...!
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரின் காலில் சில உள்காயங்கள் இருப்பதாகவும், தொடர்ந்து விளையாடுவது கில்லுக்கு காயத்தை தீவிரப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அவர் இந்த தொடரில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.