பிரபல நடிகை உயிரிழந்தார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!
பிரபல மலையாள நடிகை சுபி சுரேஷ் (42) இன்று உயிரிழந்தார்.
பிரபல மலையாள நடிகை மரணம்
மலையாள திரையுலகில் பிரபல நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளியுமான சுபி சுரேஷ் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சில மாதங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சுபிக்கு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து, இவர் மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சுபி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருடைய இறப்பு செய்தியால் மலையாள திரையுலகமும், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுபி சுரேஷ் சினிமாலா என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். மேடை நிகழ்ச்சிகளில் பல நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.