என் தந்தையின் பிறந்தநாளுக்கு விழா வேண்டாம் - ஆர்.எஸ்.எஸ்.க்கு நேதாஜியின் மகள் எதிர்ப்பு…!
என் தந்தையின் பிறந்தநாளுக்கு விழா கொண்டாட வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ்.க்கு நேதாஜியின் மகள் எதிர்த்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.க்கு நேதாஜியின் மகள் எதிர்ப்பு
நாளை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்தநாளை கொல்கத்தாவில் உள்ள ஷாஹீத் மினார் என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத் தலைமைப் பேச்சாளராக கலந்து கொள்ள உள்ளார்.
இது குறித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ் பேட்டி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
எனது தந்தை ஒரு பக்தியுள்ள இந்து. ஆனால் அனைத்து மதங்களையும் மதிக்கும் ஒரு நபர். அனைவரும் ஒன்றாக வாழ முடியும் என்று நம்பினார். ஆர்எஸ்எஸ் இதை நம்புகிறது என்று நான் நினைக்கவில்லை. நேதாஜி மதச்சார்பின்மையை நம்பினார், ஆர்.எஸ்.எஸ் அதற்கு ஏற்றதாக நான் நினைக்கவில்லை.
RSS இந்து தேசியவாத கருத்துக்களை முன்வைக்க விரும்பினால், அது நேதாஜியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாது, அதற்காக நேதாஜியைப் பயன்படுத்தினால் நான் அதைப் பாராட்ட மாட்டேன்.
நிச்சயமாக அவர்கள் நேதாஜிக்கு வெறும் உதட்டளவில் பேசவில்லை என்று நினைக்கிறேன். அவருடைய 126வது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடுவதை நான் மதிக்கிறேன்.
துணைக்கண்டத்தின் நன்மைகளுக்கு, நேதாஜியின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும். நேதாஜி இன்று உயிருடன் இருந்தால், அவர் மத்திய அரசின் மீதான பார்வையிலிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், பா.ஜ.க. அவரை கவுரவிக்காது. எனவே இந்த விஷயத்தில் அவர்களின் நலன்தான் நிறைவேறுகிறது. சித்தாந்தம் என்று பார்த்தால், நாட்டில் உள்ள வேறு எந்தக்கட்சியையும் விட காங்கிரஸ் கட்சிக்குத்தான் நேதாஜியுடன் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.