திமுகவில் உச்சகட்ட பரபரப்பு… பதவியை ராஜினாமா செய்த சுப்புலட்சுமி ஜெகதீசன்?
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை அதிருப்தி
திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போது மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
இந்த தோல்விக்கு அமைச்சர் முத்துசாமி தான் காரணம் என்று சுப்புலட்சுமி கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பதவியிலிருந்து விலகல்?
அண்மையில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் கூட சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்ளவில்லை.

சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் செயல் காரணமாக திமுகவின் தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil