திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகல்...!
திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் -
அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே போற்றும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சி மனநிறைவைத் தருகிறது. இந்த மனநிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகல்
திமுக மேலிடம் மீதான அதிருப்தி காரணமாக தனது துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதியிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.
இதனால், அதிருப்தியடைந்த சுப்புலட்சுமி, தனது தோல்விக்கு காரணம் இவர்கள்தான் என சிலரை சுட்டிக்காட்டி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், கட்சி மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் அதிருப்தியில் இருந்த சுப்புலட்சுமி அரசியிலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.