தென் இந்தியாவின் ஒற்றை‌ தலைவராக திகழும் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu DMK
By Sumathi Mar 22, 2024 11:25 AM GMT
Report

கலைஞர் கருணாநிதி போல் கட்சி நடத்த முடியுமா முக ஸ்டாலினால்?

கலைஞர் கருணாநிதி 

கலைஞர் இருந்திருந்தால் எவ்வளவு சீட் இருந்தும் ஆட்சியை கைப்பற்றாமல் விட்டு இருக்க மாட்டார்? கலைஞர் சொன்னா கேட்பாங்க! கூட்டணிக் கட்சிகள், திமுக தலைவராக ஸ்டாலினால் அது முடியுமா? இப்படிப் பல விமர்சனங்கள், கேள்விகள், பல கேலி பேச்சுகள் ஒருபுறம்..

mk stalin

அரசியல் அம்புகள் முக ஸ்டாலினை நோக்கிப் படையெடுத்தன. ஐம்பது ஆண்டுக் கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் கலைஞர் - எம்.ஜி.ஆர் கலைஞர் - ஜெயலலிதா மாபெரும் ஆளுமைகளைப் பார்த்த தமிழ்நாட்டின் வாக்காளர்கள், கலைஞர் - ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்‌நாட்டில் வெற்றிடம் உள்ளது என சில்வர் ஸ்டார் சில்பா குமார் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரை விமர்சனத்தை முன் வைத்தார்கள்.

நாற்பது வருடங்கள் தொடர்ந்து மேலாகத் தமிழ்நாட்டில் அரசியலில் கோலோச்சிய‌பிறகும், முதன் முறை சட்டமன்ற உறுப்பினர் ஆன பொழுதே முதலமைச்சராக வாய்ப்பை பெற்ற ஒ.பன்னீர் செல்வம் அவர்களும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி அவர்களும்,

நீட் விலக்கு பெறும் வரை திமுக ஓயாது..முக ஸ்டாலின் உறுதி

நீட் விலக்கு பெறும் வரை திமுக ஓயாது..முக ஸ்டாலின் உறுதி

முதல்வர்  மு.க‌ ஸ்டாலின்

முதல்வர் அரியணையில் அமர்ந்தப் போது முக ஸ்டாலின் முதலமைச்சராக முடியவில்லையே? விமர்சனத்தோடு, அதிமுக தலைவர்கள் மட்டுமில்லாது பாஜக தலைவர்கள் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக முடியாது? ஏனெனில் அவருக்கு ஜாதகத்தில் முதல்வர் ஆகக் கட்டம் இல்லை மரத்தடி ஜோசியர்கள் போல் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதை தலைகீழாய் மாற்றி முதல்வராய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மு.க‌.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கூட கூட்டணிக் கட்சிகளை எந்த அளவிற்குப் பக்குவமாகக் கையாளுவாரா என்பதைக் காட்டிலும் அதை விடச் சிறப்பாக, திமுக தலைவராகக் கூட்டணிக் கட்சிகளை இயல்பாகக் கையாண்டு இருக்கிறார். ஆளுமைமிக்க தலைவராகத் தனது பெயரைத் தமிழக அரசியல் வரலாற்றில் எழுதிவிட்டார் முக ஸ்டாலின் என்றே சொல்லாம். ஒரு காலத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லையென சொல்லியிருந்த அதிமுக தலைமை, தற்போது கண் எதிரே கூட்டணிக் கட்சிகளே அதிமுகவை விட்டு விலகிப் போய் பாஜகவோடு ஐக்கியமாக்கி விட்டன.

திமுக தலைவர் முக ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி மீண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியிலும் தொடர்வது என்பது மிகப் பெரிய சாதனை தான். எப்போது பார்த்தாலும் இரண்டரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுக தலைவர்கள் தொடர்ந்து ஒரே பல்லவியைத் திரும்பப் பாடினாலும் நடைமுறையில், தங்களோடு இணக்கமாக இருந்த கட்சிகளைக் கூட தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தலைமையால் முடியவில்லை தமிழக அரசியல் பதிவாகி உள்ளது என்பதை யாராலும் மறைக்க முடியாது. பா‌மக அதிமுகவை கை கழுவி பாஜக லோடு பத்து தொகுதிகளைப் பெற்று விட்டது. (எடப்பாடியின் ஆருடம் தவிடுபொடியானது)

 அரசியல் கணக்குகள் 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணிக் கட்சிகள் திமுக வை விட்டு விலகும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வந்த கருத்துகள் அதிமுக கூட்டணிக் கட்சிகள் காற்றில் பறந்தது போல் ஆகிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. காங்கிரஸுக்கு ஐந்து தொகுதிகள் மேல் கிடையாது ஒரு வருடமாகப் பரப்பப் பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களை அளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் அதே போன்று விசிகவுக்கு ஒரு தொகுதி தான் யூடியூப் அரசியல் விமர்சகர்கள் டிவிட்டர் அரசியல் சாணக்கியர்கள் சொல்லி வந்த அதனையும் மாற்றி இருக்கிறார்.

கூட்டணிக் கட்சிகளையும் தேவையான இடங்களை அளித்ததோடு பொருத்தமான வெற்றி பெறக் கூடிய இடங்களை அளித்திருப்பது விட்டுக் கொடுத்து அரவணைப்பதில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். ஒரு முறை சட்டமன்ற தேர்தல் கூட்டணி விஷயத்தில் அதிமுக தலைமையிடம் தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி‌ குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே சமயத்தில் அதிமுக தலைமையானது (ஜெயலலிதா), வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கடந்த காலங்களில் நடந்தது உண்டு.

தென்னந்தியாவின் நம்பிக்கை

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக் கட்சிகளை இணக்கமாகக் கையாண்டு முழுமையாக இழுபறி இல்லாமல் தொகுதிப் பங்கீட்டை நேர்த்தியாகக் கையாண்டு தான் இருக்கிறார். அதே கூட்டணிக் கட்சிகளுக்கு சில பிணக்குகள் இருந்தாலும் அவை மக்களுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. புதிதாக திமுக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனையும் கூட்டணியில் சேர்த்து தமிழ் நாடு முழுவதும் அவரை பிரச்சாரம் செய்யும் வகையில் ராஜ்யசபா தரப்படும் என உறுதி அளித்து அதிலும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். பொதுவாக ஒரு கூட்டணியை மக்கள் ஆதரிக்கிறார்களா? வெற்றி பெற வைக்கிறார்களா என்பதைக் காட்டிலும் அரசியல் கட்சிகளை இலகுவாகக் கூட்டணிக்குள் தொடர்ந்து வைத்துக்கொண்டு வெற்றி பார்மலாவை சரியாகப் பயன்படுத்து வதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவராக இருக்கிறார்.

அரசியல், தேர்தல் களம், கூட்டணி, செயல்பாடுகள், தெளிவான பார்வை என ஸ்டாலின் அவர்களின் அரசியல் கணக்குகள் அவர் எதிர்பார்ப்பதை விடக்‌ கன கச்சிதமாகவே இருந்து வருகிறது. திமுக தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து வெற்றி‌ வாகை சூடி வருகிறார். அது நாடாளுமன்ற முழுமையாகக் கைகொடுக்கும் மென்றே தற்போதைய‌ அரசியல் நிலவரங்கள் நமக்கு சுட்டி‌காட்டுகின்றன.

திராவிட இயக்கங்களின் ஒற்றை தலைமையாய் முக ஸ்டாலின் விளங்குகிறார் என்றால் யாரால் அதை மறுக்க முடியும். கூட்டணிக் கட்சித் தலைவர்கள்‌மட்டுமல்ல கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுமை‌மிக்க தலைவராக விளங்குகிறார்‌ அவரின் அரசியல் பாதையில் மிக வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலோடு இல்லாமல் அகில இந்திய அரசியல் தலைவர்களுடன் அவர் செயல்படும் விதம் தென்னிந்தியாவின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவராக விளங்குகிறார் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமோ?  

சுபாஷ்சந்திரபோஸ் ராஜவேலன் - சிறப்பு கட்டுரை (Value Media Middle East -UAE )