பணி நேரத்தில் Reels..வேலையை இழந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் - பகீர் பின்னணி!
பணி நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்தற்கு பெண் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெண் SP
பீகார் மாநிலத்தில் உள்ள பஹார்பூர் காவல் நிலையத்தில் பிரியங்கா குப்தா என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ரீல்ஸ் மீது கொண்ட மோகத்தால் பணி நேரத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தா காவலர் சீருடையில் காரில் "ஜிந்தகி இத்னா” என்று தொடங்கும் பிரபல இந்திப் பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரீல்ஸ் வீடியோ
இந்த விவகாரம் பீகார் டிஜிபி கவனத்திற்குச் சென்ற நிலையில் பிரியங்காவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.மேலும் எந்தவொரு காவல்துறை அதிகாரியும், தங்கள் பணி நேரத்தில் சீருடையில் இருக்கும்போது ரீல்ஸ்கள் அல்லது வீடியோக்களை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பணி நேரத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது . இதை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பீகார் டிஜிபி கூறியுள்ளார்.