தேவை உடனடி உதவி உபதேசம் அல்ல..! நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் பதிலடி..!

Smt Nirmala Sitharaman Tamil nadu Madurai
By Karthick Dec 22, 2023 06:13 PM GMT
Report

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசின் மீது சரமாரி குற்றசாட்டுக்களை முன்வைத்தார்.

நிர்மலா சீதாராமன்

இன்று தென்தமிழக வெள்ள மீட்புப்பணிகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வரிசைப்படுத்தினர்.

su-venkatesan-slams-nirmala-seetharaman-comments

அதே நேரத்தில், தமிழக அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்த அவர், இங்கு மக்கள் தவித்து கொண்டிருந்த போது, முதல்வர் ஏன் டெல்லி சென்றார் என்றும், உதயநிதி அப்பன் சொத்தையா கேட்டோம் என்ற கருத்திற்கும் பதிலடி கொடுத்தார்.

மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது, ஸ்டாலின் டெல்லி சென்றது ஏன்? நிர்மலா சீதாராமன் கேள்வி

மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது, ஸ்டாலின் டெல்லி சென்றது ஏன்? நிர்மலா சீதாராமன் கேள்வி

சு வெங்கடேசன் விமர்சனம்

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் பேட்டியை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே." - நிர்மலா சீதாராமன்.

ரயில்டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க?என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.