பாஸ் கொடுத்த பாஜக எம்.பி அவைக்குள்ளே..!! நாங்கள் வெளியேற்றமா..? சு.வெங்கடேசன் கேள்வி

Smt M. K. Kanimozhi Delhi Government Of India India
By Karthick Dec 15, 2023 07:08 AM GMT
Report

மக்களவையில் தொடர்ந்து 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவை

3 நாட்களாக இந்திய மக்களவை பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. புகை குண்டு பயன்படுத்தப்பட்டதில் இருந்து, இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் இது குறித்து கேள்வியினை எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

su-venkatesan-questions-suspend-of-15-mp

அமளியில் ஈடுபட்டதன் காரணமாக நேற்றைய தினம் திமுகவின் எம்.பி கனிமொழி உட்பட 14 பேர் அவையில் இருந்து இதன் காரணமாக சபாநாயகரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கேள்வி கேட்பதற்கு சஸ்பெண்ட்டா? என எதிர்க்கட்சிகள் பலவும் இன்றும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சு வெங்கடேசன் கேள்வி

இந்நிலையில், இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!

அவையில் மட்டுமல்ல..பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம்.இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபா என்று வினவியுள்ளார்.