சுண்டு விரல விடுங்க...இதய துடிப்பை பாருங்க..! சு வெங்கடேசன் நச் கருத்து..!

India Draupadi Murmu
By Karthick Dec 20, 2023 11:43 PM GMT
Report

நாடாளுமன்ற நகர்வுகள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனின் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

நாடாளுமன்ற அத்துமீறல்

விவகாரம் சென்ற வாரம், எம்.பி.க்கள் அரங்கிற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் தற்போது வரை நாடாளுமன்றத்தின் அவைகளில் எதிரொலித்து வருகின்றது.

சுண்டு விரல விடுங்க...இதய துடிப்பை பாருங்க..! சு வெங்கடேசன் நச் கருத்து..! | Su Venkatesan Comments Parliament Issue

அமளியில் ஈடுபட்ட 141 எம்.பி'க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பெரும் வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு நாட்டின் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டங்களி தெரிவித்து வருகின்றனர்.

[WXJBJ37

சு.வெங்கடேசன்

இந்நிலையில், தான் இந்த சம்பவங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிவு குறிப்பிடும் தக்கவகையில் அமைந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களே! 144 எம்பிக்களின் இடைநீக்கம் பற்றிய உங்கள் கருத்தும் அறிவுரையுமே இன்று தேசத்தின் தேவை.

சுண்டு விரல விடுங்க...இதய துடிப்பை பாருங்க..! சு வெங்கடேசன் நச் கருத்து..! | Su Venkatesan Comments Parliament Issue

எதிர்க் குரலே இல்லாத நாடாளுமன்றம் தன் ஜீவனை இழக்கிறது. இதயத் துடிப்பை சீராக்க வேண்டிய நேரம் இது. சுண்டு விரல் "காயம்" பற்றி பின்னர் கவனிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்