‘ஏலேய்..என்ன கருமம்ல இது’ ; தண்ணீருக்கு பதிலாக எச்சிலை பயன்படுத்திய அழகுக் கலை நிபுணர் ; அதிர்ச்சி வீடியோ

uttar pradesh faces backlash strylist uses spit
By Swetha Subash Jan 08, 2022 06:09 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில், அழகுக் கலை நிபுணர் ஜாவேத் ஹபீப் பயிற்சி முகாம் ஒன்று நடத்தி வருகிறார்.

அப்போது ஒரு பெண்ணை அழைத்து அவருக்குச் சிலை அலங்காரம் செய்தார்.

அப்போது 'அழகு நிலையத்தில் தண்ணீர் இல்லை என்றால் எச்சிலைப் பயன்படுத்துங்கள்' என கூறி அந்த பெண்ணின் தலையில் எச்சிலைத் துப்பி அலங்காரம் செய்ய தொடங்கினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் ஜாவேத் ஹபீப்பின் செயலுக்குப் படும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தர பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் ஜனவரி 11ம் தேதி ஜாவேத் ஹபீப் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செயலுக்குப் பிரபல அழகுக்கலை நிபுணர் ஜாவேத் ஹபீப் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த செயலால் நீங்கள் புண்பட்டிருந்தால் என் இதயத்திலிருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்" என தெரிவித்துள்ளார்.