தமிழக முதலமைச்சரின் கான்வாய் முன் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது...!

M K Stalin Chennai
By Nandhini Aug 30, 2022 07:25 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கான்வாய் வாகனம் முன்பு குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்துக் கொண்டிருந்தார்.

m.k.stalin

அப்போது, சென்னை மெரினா காமராஜர் சாலையில் முதலமைச்சரின் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, கான்வாய் முன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சாகசம் செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து, உடனடியாக அந்த இளைஞரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சுஜய் (20) என்பது தெரிய வந்துள்ளது.