பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை - எல்.முருகன், அண்ணாமலை நன்றி
பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைப்பதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மகாகவி பாரதியார் மீது பிரதமர் அளவில்லாத மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். அனைத்து தமிழ் மக்களும் உள்ளம் பூரிப்பு அடைந்துள்ளோம். புதிய ஆளுநர் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை; இதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுநராக பணிபுரிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலை.யில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகள்.
தமிழ் மொழிக்கும் மகாகவி பாரதிக்கும் பெருமை சேர்த்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.