பள்ளியில் கையில் கயிறு கட்டி வந்த மாணவனை நிர்வாணமாக்கி அடித்து துரத்திய மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்

By Nandhini May 31, 2022 10:54 AM GMT
Report

சமீபத்தில் கோவை, ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில், கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து சராமரியாக அடித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல், மாலை கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக மாணவிகள் காத்துகொண்டிருந்த போது திடீரென இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணவிகள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இந்த குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நீலம் மற்றும் மஞ்சள் வர்ணக்கயிறு அணிந்து வந்த மாணவனை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து அடித்து சட்டையை கிழித்து அரை நிர்வாணமாக ஓடவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளியில் கையில் கயிறு கட்டி வந்த மாணவனை நிர்வாணமாக்கி அடித்து துரத்திய மாணவர்கள்  - அதிர்ச்சி சம்பவம் | Students Who Were Beaten And Chased