சத்து மாத்திரையை உட்கொண்ட மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Tamil nadu
1 வாரம் முன்

விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

மயங்கி விழுந்த மாணவர்கள் 

விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர் .

இதனை அடுத்து நேற்று மாணவ -மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்பட்டது.இந்த மாத்திரை உட்கொண்ட மாணவ - மாணவிகள் சில நிமிடங்களில் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பள்ளி ஆசிரியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.அதன் பிறகு மாணவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கபட்டனர்.

அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியர் த.மோகன் மற்றும் எம்.எல்.ஏ. நா.புகழேந்தி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.