ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்

By Thahir Aug 31, 2022 11:44 AM GMT
Report

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் மதிப்பெண்களை குறைந்து வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் 

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாகவும் இதனால் தேர்வில் தோல்வி அடைந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள் | Students Tied Teachers To A Tree And Attacked Them

ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண் வழங்கியதால் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியர்களை மாணவர்கள் மீட்டிங் நடத்துகிறோம் என்று கூறி ஆசிரியர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியர்களை மரத்தில் கட்டி போட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் லேசான காயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செய்முறை தேர்வு மதிப்பெண்ணை தலைமை ஆசிரியர் கணக்கிடாததே மாணவர்களின் தோல்விக்கு காரணம் என பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்மைகாலமாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவம் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.