சென்னையில் மின்சார ரயில் மீது கல் வீசி தாக்கிய மாணவர்கள் : காரணம் என்ன ?
இரு கல்லூரி மாணவிகள் மாணவர்கள் மோதிக் கொண்டதோடு அல்லாமல் மின்சார ரயில் மீது கல் வீசித் தாக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் .சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
மாநில கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ரயில் நிலையங்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது கடந்த சில காலமாக இந்த மோதல் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ,நேற்று திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்து உள்ளனர். இதனால் அவர்களை கீழே இறக்கி விட்டிருக்கிறார்கள். அப்போது அதே திசையில் மின்சார ரயிலில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைக் கண்டு சுதாரித்துக்கொண்டு போலீசார் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் பெரம்பூர் அருகே சிறுது நேரம் பரபரப்பும் பதட்டமும் நிலவி இருக்கிறது.