விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - நெஞ்சை பதற வைத்த சம்பவம்

Arrest Sexual abuse Students Person Thiruvannamalai திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை மாணவர்கள் கைது நபர்
By Nandhini Mar 14, 2022 11:28 AM GMT
Report

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே பத்தியாவரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சூசை நகரில், அரசு நிதியுதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இந்த சுமார் 112 மாணவர்கள் தங்கி அப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த விடுதியின் வார்டனாக துரைபாண்டியன் (37) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். துரைபாண்டியனுக்குத் திருமணமாகி மனைவி, 3 வயதில் ஒரு குழந்தை உள்ளனர்.

இந்நிலையில், துரைப்பாண்டி விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களை அவ்வப்போது அழைத்துள்ளார். வார்டன் அழைத்ததும் மாணவர்கள் சென்றபோது, மாணவர்களிடம் துரைப்பாண்டி பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார்.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - நெஞ்சை பதற வைத்த சம்பவம் | Students Sexual Abuse Person Arrest

இவரின் இந்தச் செயலால் பள்ளி மாணவர்கள் பலர் பயந்துள்ளனர். இவரின் அட்டகாசம் தாங்க முடியாத பள்ளி மாணவர்கள் '1098' என்ற சைல்டு லைன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உரிய விசாரணை மேற்கொள்ளும்படி எஸ்.பி பவன்குமாருக்கு உத்தரவிட்டார்.

விடுதியில் துரைப்பாண்டியை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் துரைப்பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். படிக்கும் மாணவர்களிடம் வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.