இலங்கையில் அரசு பதவி விலக கோரி மாணவர்கள் நாடாளுமன்றம் முற்றுகை - கண்ணீர் புகைக்குண்டு வீச்சால் பரபரப்பு..!
இலங்கையில் அரசு பதவி விலக கோரி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன. இதனால் அந்நாட்டு நாளுக்கு நாள் போராட்டமானது தீவிர அடைந்து வருகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபய ராஜபக்சே மற்றும் அரசு பதவி விலக கோரி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பள்ளிகள்,கல்லுாரிகள்,அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை களைக்க போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர்.ஆனால் மாணவர்கள் களைந்து செல்லாததால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.
ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியே போராட்ட களமாக மாறியுள்ளது.