ஒய்யாரமாக ஆசிரியை.. அரசு பள்ளியில் கால் அழுத்திய பழங்குடியின மாணவி!
அரசு பள்ளியில் ஆசிரியைக்கு மாணவி கால் அழுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை செயல்
ஆந்திரா, பந்தபள்ளி கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றார்கள்.

இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சுஜாதா. இவர் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி, மாணவிகளிடம் கூறியிருக்கிறார். ள்ளி வகுப்பிலேயே நாற்காலியில் சாய்ந்து கொண்டு, ஆசிரியர் செல்போனில் பேசிக்கொண்டிருக்க, பள்ளி மாணவிகள் 2 பேர், ஆசிரியையின் கால்களுக்கு மசாஜ் செய்கிறார்கள்.
அதிகாரி நடவடிக்கை
கடந்த 2 நாட்களாகவே இந்த வீடியோ வைரலானதையடுத்து, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் அதிகாரி ஜெகன்னாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார் அப்போது அந்த ஆசிரியை,
தனக்கு முழங்கால் வலி இருப்பதாகவும், அந்த நேரத்தில் அதிகமான வலி இருந்ததால்தான், மாணவர்கள் உதவியதாகவும் கூறினார்.
ஆனால், ஆசிரியையின் இந்த விளக்கத்தை ஏற்காத அதிகாரி ஜெகன்னாத் , சுஜாதா மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விசாரணை முடியும் வரை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.