பிளஸ்-2 தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்...
நேரடியாக நடைபெறும் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் பள்ளி பொதுத் தேர்வுகள், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகமும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவர்கள் நேரடியாக தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாற்று மதிப்பீட்டு முறையைக் கையாள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.