ஒரு இளைஞரை 10க்கும் மேற்பட்டோர் துரத்தி வெட்டிய சம்பவம் - மெரினாவில் பரபரப்பு!
Attempted Murder
Chennai
Crime
By Sumathi
ஒரு வாலிபரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் துரத்தி வெட்டும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோதல்
சென்னை மெரினா கடற்கரையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
அதில் ஒரு இளைஞரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் துரத்தி வெட்ட முயன்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து காயமடைந்த மாணவர் ஒருவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.