நடுரோட்டில் சராமரியாக தாக்கிக்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி அடித்துக் கொள்கின்றனர்.
இந்தச் சம்பவம் கோவை, ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து சராமரியாக அடித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக மாணவிகள் காத்துகொண்டிருந்த போது திடீரென இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணவிகள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இந்த குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.