லக்கி பாஸ்கர் படம் பார்த்த மாணவர்கள்.. விடுதியிலிருந்து தப்பியோட்டம் - பகீர் சம்பவம்!
லக்கி பாஸ்கர் படம் பார்த்த விடுதியில் உள்ள மாணவர்கள் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்கி பாஸ்கர்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு தனியார் விடுதி இயங்கி வருகிறது. இங்கு தங்கி 9ம் வகுப்பு படித்து வரும் 4 மாணவர்கள் அண்மையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை நேற்று பாரத்ததாக கூறப்படுகிறது.
அந்த படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கும் துல்கர் சல்மான் இறுதியில் கார், வீடு என பெரிய செல்வந்தராக மாறியிருப்பார். இது அந்த மாணவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனால் உத்வேகமடைந்த மாணவர்கள் அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பியோடி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
மாணவர்கள்
இதனையடுத்து, அவர்கள் காணாமல் போனதை அறிந்த அவர்களது பெற்றோர்கள் உடனே இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து,
விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், லக்கி பாஸ்கர்' படம் பார்த்து பள்ளி மாணவர்கள் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.