அரசுப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள் - கிளம்பிய எதிர்ப்பு
ஒசூரில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த சம்பவத்திற்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இராயக்கோட்டை சாலையில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வரும் வார நாட்களில் இந்த பள்ளியில் கல்வி சம்பந்தமான ஆய்வுகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் மேல் தளங்கள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றில் முளைத்துள்ள புள் புதர்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றை சுத்தம் செய்துள்ளனர்.

கிளம்பிய எதிர்ப்பு
பழைய கட்டிடத்தின் மேல் தளத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி மாணவர்கள் ஏறி நின்று சுத்தம் செய்யும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களை வேலைகளுக்கு அனுமதிக்க கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில் ஓசூரில் அரசுப்பள்ளி மாணவர்களை அப்பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்தது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.