கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவிகள் - தலைமை ஆசிரியை கொடூரம்!

Crime Dharmapuri
By Sumathi Jan 13, 2025 11:30 AM GMT
Report

அரசுப் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

மாணவிகள் செயல்

தருமபுரி, பெருங்காடு மலைகிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை 150 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவிகள் - தலைமை ஆசிரியை கொடூரம்! | Students Clean Toilet Govt School Hm Suspend

தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது, கழிவறைக்கு தண்ணீர், நிரப்புவது, பள்ளியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை, பள்ளி மாணவிகளை வைத்து செய்து வந்துள்ளனர்.

கோயிலுக்கு வந்த சிறுமி; பாத்ரூமில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - SSI வெறிச்செயல்!

கோயிலுக்கு வந்த சிறுமி; பாத்ரூமில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - SSI வெறிச்செயல்!

ஆசிரியை கொடுமை

இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோவாக எடுத்து, கல்வித் துறைக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் தென்றல், நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

dharmapuri

அப்போது பள்ளி மாணவிகளை, ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே, பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.