சிவராத்திரிக்கு அசைவம் சாப்பிட மாணவிகள் - கொடூர தாக்குதல் நடத்திய மாணவர் அமைப்பு

Shivaratri Delhi
By Karthikraja Feb 27, 2025 09:30 AM GMT
Report

 சிவராத்திரியன்று பல்கலைக்கழக வளாகத்தில் அசைவம் சாப்பிட மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மகா சிவராத்திரி

நேற்று உலகம் முழுவதும் ஹிந்து மதத்தை பின்பற்றும் மக்களால் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இரவு முதலே கோவில்களில் திரண்ட மக்கள், சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். 

sau delhi non veg on shivratri

இந்நிலையில், டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் (SAU) மகா சிவராத்திரி அன்று அசைவு உணவு வழங்கப்பட்டதாக மோதல் ஏற்பட்டுள்ளது.

அசைவ உணவால் மோதல்

நேற்று(26.02.2025) சிவராத்திரி தினத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் யாரும் அசைவம் சமைக்க கூடாது, அசைவம் சாப்பிட கூடாது என வலது சாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) கூறியிருந்தது. 

abvp attack in delhi sau shivrathri

ஆனால்  இடது சாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தை (SFI) சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் பல்கலைகழக வளாகத்தில் அசைவம் சாப்பிட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த ABVP அமைப்பை சேர்ந்தவர்கள், மதியம் 3 மணியளவில் பல்கலை கழக கேன்டீனில் அசைவ உணவு சாப்பிட மாணவ, மாணவிகளை கடுமையாக தாக்கியுள்ளனர்.

காவல்துறை விசாரணை

இது குறித்து பேசிய ABVP அமைப்பினர், "மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதனால் அன்று அசைவம் சாப்பிட வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தோம். இந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கும் வகையில், மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மாணவர் சங்கத்தின் சூழ்ச்சி வேலை" என தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக SFI வெளியிட்டுள்ள அறிக்கையில், "அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களைத் ஏபிவிபி குண்டர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது."

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு சென்று, அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்பையும் அமைதிப்படுத்தி நடந்த பிரச்சினை குறித்துக் கேட்டறிந்தனர். இதுவரை முறையான புகார் அளிக்கப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.