என் காதல் உங்கள் கையில்தான் உள்ளது - விடைத்தாளுடன் 500 ரூபாயை லஞ்சமாக வைத்த மாணவர்கள்
சமீபத்தில், நாடு முழுவதும் உள்ள மாநில பாடத்திட்ட பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட அனைத்து பாடத்திட்டத்தின் கீழ் பயிலும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது.
10 ஆ,ம் வகுப்பு தேர்வு
இதில், கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வை, 4.27 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், விடைத்தாளை திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மாணவர்கள் சிலர் விடைத்தாளுடன், 500 ரூபாயை வைத்து தேர்ச்சியடைய வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடைத்தாளுடன் ரூ.500
இதில் ஒரு மாணவர் 500 ரூபாயை விடைத்தாளுடன் வைத்து, "நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடர முடியும்" என எழுதியுள்ளார்.
இன்னொரு மாணவர், "தயவுசெய்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்யுங்கள்; என் காதல் உங்கள் கைகளில்தான் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவர், "இந்த ரூ. 500 உடன் தேநீர் அருந்துங்கள், ஐயா, தயவுசெய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள்" என எழுதியுள்ளார்.
மற்றொருவரோ, "நீங்கள் என்னைத் தேர்ச்சி பெறவைத்தால், நான் உங்களுக்குப் பணம் தருகிறேன்" என்று எழுதியுள்ளார்.
சில மாணவர்கள், "இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் பொறுத்துதான் தங்கள் எதிர்காலம் இருக்கிறது என்று எழுதியுள்ளனர்.