60 மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட மாணவி அதிரடி கைது

Punjab
By Thahir Sep 18, 2022 06:16 AM GMT
Report

சண்டிகர் பல்கலை கழகத்தில் மாணவிகள் 60 பேரின் அந்தரங்க வீடியோ காட்சிகளை வெளியிட்ட மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவிகள் திடீர் போராட்டம் 

பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் பல்கலை கழகத்தில் மாணவி ஒருவர் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி மாணவிகள் 60 பேரின் வீடியோ காட்சிகளை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மாணவிகள் அந்தரங்க வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானதாக கூறி நேற்று இரவு மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

60 மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட மாணவி அதிரடி கைது | Student Who Published Videos Of Students Arrested

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது இதற்கு அம்மாநில காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் போது மாணவி ஒருவர் சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார் அவரை மீட்ட சக மாணவிகள் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்ட மாணவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரூபிந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.

மாணவிகள் அமைதியாக இருக்கும் படி அம்மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் ஹெச்எஸ் பெயின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். நள்ளிரவில் மாணவிகள் ஒன்று திரண்டு திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.