ஸ்லீவ் லெஸ் அணிந்து மார்கெட் வந்த மாணவி; திட்டிய வியாபாரிகள் - வைரல் வீடியோ காட்சிகள்!
ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து வந்த மாணவியிடம் வியாபாரிகள் வாக்குவாதம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சித்த வியாபாரிகள்
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி. இவர் ஆந்திராவில் உள்ள சட்ட கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகின்றார்.
இவர் ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து பூ மார்கெட்டிற்கு தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பூ கடை உரிமையாளர் ஒருவர் சிலிவ் லெஸ் மாதிரியான அரை குறை ஆடைகள் அணிந்தபடி பூ மார்கெட்டிற்கு வரக்கூடாது என பேசியதாக கூறப்படுகிறது.
உடனே, உடை சரியாகத்தான் இருக்கிறது, உங்களது பார்வையை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் என அந்த பூக்கடைக்காரரிடம் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மாணவி பதிலடி
இதனையடுத்து பூ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சட்ட மாணவி ஜனனி தனது வழக்கறிஞர்களுடன் வந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து உடை குறித்து அத்துமீறி ஆபாசமாக பேசிய பூ மார்க்கெட் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.