வகுப்பறையில் மேஜையை உடைத்து அட்டகாசம் செய்த பள்ளி மாணவர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Apr 25, 2022 09:27 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 10 மாணவர்கள் சேர்ந்து வகுப்பறையில் இருக்கும் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து கீழே தள்ளுகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், வேலூர் அடுத்த தொரப்பாடியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை 12-ம் வகுப்பு C பிரிவு மாணவர்கள் சிலர் வீட்டுக்குச் செல்லாமல் வகுப்பறையிலேயே மேஜைகளை உடைத்து அட்டகாசம் செய்தனர். ஆசிரியர்கள் மாணவர்களை பார்த்து வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறியும், அதை சற்றும் பொருட்படுத்திக் கொள்ளாத மாணவர்கள், வகுப்பறையிலிருந்த இரும்பு மேசைகளை அடித்து உடைத்தனர்.

உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இதை அறிந்த போலீசார் உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து வேலூர் RDO பூங்கொடி, வட்டாட்சியர் செந்தில், DEO சம்பத் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அட்டகாசத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களை பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சிய குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார்.