முதல்வர் படத்துடன் பட்டம் பெற்ற மாணவர்! ஆளுநர் விழாவில் சர்ச்சை

By Fathima Feb 02, 2026 12:59 PM GMT
Report

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் படத்துடன் பட்டம் பெற்ற மாணவரால் சர்ச்சை எழுந்துள்ளது.

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் இன்று 87வது பட்டமளிப்பு விழா நடந்தது.

இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பட்டம் வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது புஷ்பராஜ் என்ற மாணவரை அழைத்த போது, பட்டத்துடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்படத்தையும் இணைத்து பட்டம் பெற்றார்.

புஷ்பராஜின் இச்செயலால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது, கடந்தாண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடந்த விழாவின் போது மாணவி ஒருவர் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் படத்துடன் பட்டம் பெற்ற மாணவர்! ஆளுநர் விழாவில் சர்ச்சை | Student University Graduated With Picture Stalin