முதல்வர் படத்துடன் பட்டம் பெற்ற மாணவர்! ஆளுநர் விழாவில் சர்ச்சை
By Fathima
அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் படத்துடன் பட்டம் பெற்ற மாணவரால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் இன்று 87வது பட்டமளிப்பு விழா நடந்தது.
இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பட்டம் வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது புஷ்பராஜ் என்ற மாணவரை அழைத்த போது, பட்டத்துடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்படத்தையும் இணைத்து பட்டம் பெற்றார்.
புஷ்பராஜின் இச்செயலால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது, கடந்தாண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடந்த விழாவின் போது மாணவி ஒருவர் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு IBC Tamil
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : உக்ரைன் போரில் நான்கரை இலட்சம் வீரர்கள் பலி IBC Tamil
எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்:ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அராக்சி IBC Tamil