படிப்புக்காக ஒவ்வொரு வாரமும் 6,000 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் மாணவி
பொதுவாக கல்வி மற்றும் வேலைக்காக சிலர் 2 அல்லது 3 மணி நேரம் பயணம் மேற்கொள்வார்கள்.
பயண தூரம் அதிகமாக இருந்தால், படிக்கும் அல்லது வேலை செய்யும் பகுதிக்கே, குறிப்பிட்ட காலத்திற்கு குடி பெயர்வார்கள்.
படிப்புக்காக வாரம் 6,000 கி.மீ பயணம்
ஆனால் பெண் ஒருவர், படிப்புக்காக வாரம் 6,000 கி.மீக்கு மேல் பயணம் செய்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த 30 வயதான நாட் செடிலோ(Nat Cedillo) என்ற மாணவி நியூயார்க் மாகாணத்தில் உள்ள மான்ஹாட்டன் சட்ட பள்ளியில் படித்து வருகிறார்.
தனது கணவர் சாண்டியாகோவுடன்(Santiago) புரூக்ளினில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு மெக்சிகோவின் சிறந்த வானிலை மற்றும் மலிவு வாழ்க்கை முறை காரணமாக அங்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால் சட்ட படிப்பை தொடர் வேண்டிய சூழலில், ஒவ்வொரு வாரமும் மெக்சிகோவில் இருந்து 3,300 கிமீ தூரத்தில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு சென்று, மீண்டும் 3,300 கிமீ பயணம் செய்து மெக்சிகோ வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை மெக்ஸிகோவில் இருந்து விமானத்தில் ஏறி நியூயார்க் சென்று வகுப்புகளை முடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை இரவுக்குள் மெக்சிகோ திரும்புகிறார்.
"நான் விமானத்தில் பயணம் செய்யாத நாட்களே சிறப்பானவை. மெக்சிகோவில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க முடிகிறது" என செடிலோ தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் 13 வாரங்களில் விமான பயணம், உணவு மற்றும் குறுகிய காலம் அங்கு தங்குவதற்கு என இதுவன்றோ 2,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 லட்சம்) செலவிட்டுள்ளார்.

Siragadikka Aasai: கடைசி நொடியில் சத்யாவைக் காப்பாற்றிய முத்து... சீதா மீது எழுந்த சந்தேகம் Manithan
