ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட மாணவி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
Viral Video
By Nandhini
ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே மாணவி சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிக்கிக் கொண்ட மாணவி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், விசாகப்பட்டினத்தில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே மாணவி ஒருவர் சிக்கிக்கொண்டார். அவரை மீட்ட பலர் முயற்சி செய்கின்றனர்.
ஆனாலும், அந்த மாணவியால் வெளியே வர முடியவில்லை. வலி தாங்க முடியாமல் அந்த மாணவி அழுது கலங்குகிறார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரயில்வே ஊழியர்கள் அந்த மாணவியை காப்பாற்றினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
