படிக்காமல் ரீல்ஸ் பார்த்த 12-ம் வகுப்பு மாணவி - தாய் கண்டித்ததால் விபரீத முடிவு!
தாயார் கண்டித்ததால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை
சென்னை மதுரவாயல் அருகே உள்ள இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் ஸ்ருதிலயா (17). இவர் அரசு பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாணவியின் தயார் வேலை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மாணவியின் அரை நீண்ட நேரமாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தாய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தாரா. அப்போது மாணவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
கண்டித்த தாய்
இதுகுறித்து தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் "12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மாணவி படிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அவரின் தாயார் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்" என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.