நீக்கிய வாத்தியாரை தூக்கிய மாணவன் - பதைபதைக்கும் சம்பவம்!
பள்ளியிலிருந்து தன்னை நீக்கிய ஒரு ஆசிரியரை அந்த மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோட்புட்லி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 45 வயதான ஆசிரியர் நாதர் யாதவ் என்பவர் பணி யாற்றினார் .அந்த ஆசிரியரிடம் பல மாணவர்கள் 12ம் வகுப்பில் படித்து வந்தனர் .அந்த வாத்தியாரிடம் ஒரே ஒரு மாணவன் வகுப்பில் சண்டை போட்டு ,தகராறு செய்தார் .அதனால் அந்த வாத்தியார் அந்த மாணவனுக்கு டி சி கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார் .
இந்நிலையில் சமீபத்தில் அந்த பள்ளியின் 12ம் வகுப்பு ரிசல்ட் வந்துள்ளது ,அந்த ரிசல்டில் அந்த மாணவனோடு படித்த அணைத்து மாணவர்களும் பாஸ் ஆகிவிட்டனர் .ஆனால் அந்த பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட இந்த மாணவர் மட்டும் தோல்வியடைந்தார் .
அதனால் அந்த மாணவர் தன்னை ஸ்கூலிலிருந்து நீக்கிய ஆசிரியர் மீது கடும் கோபமாக இருந்தார் .அவரை பழி வாங்கு துடித்தார் .அதனால் கடந்த வியாழக்கிழமையன்று அந்த ஆசிரியர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது அம்மாணவர் மேலும் ஒரு மாணவனுடன் பைக்கில் வந்து அந்த வாத்தியாரின் தொடையில் சுட்டு விட்டு ஓடி விட்டார் .
அதனால் துப்பாக்கி குண்டு பாய்ந்த அந்த ஆசிரியருக்கு அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .போலீசார் வாத்தியாரை சுட்ட மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்