தேர்வில் பிட் அடித்த மாணவியை திட்டிய ஆசிரியர் - எலி மருந்து சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு சம்பவம்

Tamil nadu
By Nandhini Apr 24, 2022 09:44 AM GMT
Report

திட்டக்குடியைச் சேர்ந்தவர் ராயர். இவரது மகள் அதே பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், மாதிரி தேர்வின் போது, மாணவி பிட் அடித்ததாக ஆசிரியர் மாணவிகள் மத்தியில் ஆசிரியர் திட்டி, அசிங்கப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

வீட்டிற்கு வந்த மாணவி மிகுந்த மனஉளைச்சலுடன் இருந்துள்ளாள். ஆசிரியர் திட்டியதை நினைத்து, நினைத்து நொந்துப்போன மாணவி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாணவி மயங்கியதைப் பார்த்த பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் திட்டியதால், மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்வில் பிட் அடித்த மாணவியை திட்டிய ஆசிரியர் - எலி மருந்து சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு சம்பவம் | Student Suicide Attempted